ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!

 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!

நெல்லை ரஜினி மக்கள் மன்றத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி வெளியிட்டது போல ஒரு கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், அதனை பற்றி விளக்கம் அளித்த ரஜினி, ‘அது நான் எழுதிய கடிதம் இல்லை. அதில் தனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்ட தகவல் உண்மை தான்’ என தெரிவித்திருந்தார். இதனால் அவர் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!

இந்த நிலையில், நெல்லை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது உள்ளிட்ட 50 பேர் திமுக செயலாளர் அப்துல் வகாப் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது குறித்து பேசிய அவர்கள், ரஜினி மக்கள் மன்றம் தற்போது செயல்படாத இயக்கமாக இருப்பதால் திமுகவில் இணைந்துள்ளோம். திமுக தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறது. மக்கள் இயக்கமாக திமுக செயல்படுவதால் திமுகவில் இணைந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.