• December
    15
    Sunday

Main Area

Mainபிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி

ரஜினி
ரஜினி

சட்டசபை தேர்தலில் தான் நான் களம் இறங்குவேன்... பாராளுமன்ற தேர்தலில் போட்டி கிடையாது’ என்று ரஜினி அறிவித்த போது, பலரும் ரஜினியை எள்ளி நகையாடினார்கள். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை செயல்படுத்த துவங்கிவிட்டார் ரஜினி. 

rajini

பொதுமக்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் பொறுத்தவரையில் ரஜினி படங்களில் பிஸியாக இருக்கிறார்... அடுத்தடுத்து ஷூட்டிங்கில் இருக்கிறார் என்பது தான். ஆனால், ஷூட்டிங்கில் இருந்தாலும், அடுத்தடுத்து நடக்க வேண்டிய லிஸ்ட்டை ஓ.கே. செய்து தமிழகம் முழுக்கவே களத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினரை இறங்கிவிட்டிருக்கிறார் ரஜினி.

கமல் மய்யமாய் உட்கார்ந்து  பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் மனசில் ஈரத்தை கசிய விடுவது ரஜினியின் மக்கள் மன்றமும், சீமானின் நாம் தமிழரும் தான். கைக்காசைப் போட்டு தீவிரமாய் இந்த இரு அணிகளும் பொதுமக்களின் மனசை வென்றெடுத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலோ... சட்டமன்ற தேர்தலோ இவர்களின் சேவை நிச்சயமாக நினைவுகூர்ந்து கவனிக்கப்படும்’ என்கிறார்கள் பகுதி மக்கள்.

rajini and kamal

மழை வேண்டி ஆளும்கட்சி வருண யாகம் நடத்துகிறது. தண்ணீர் இல்லை என்று எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம் செய்கிறது. ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் வரும் என்கிறார் எடப்பாடி. ஜோலார்பேட்டையிலிருந்து எடுத்தால் பிரச்சனை வரும். வேறு எங்கேயாவது எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் துரைமுருகன். 

rally

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க களமிறங்கிய ரஜினி மக்கள் மன்றம், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி சோளிங்கரில் பிரமாண்ட பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பேரணியைப் பார்த்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

தண்ணீரின்றி தவிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள வீடுகளுக்குத் தினமும் சென்று தண்ணீர் வழங்கி வருகிறார்கள். சோளிங்கர் பகுதியைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 4 டேங்க் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், மாவட்டம் முழுவதும் அந்தந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மூலம் தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“தங்களது வீடுகளில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும். குடிநீரை வீணாக்குவதை போதுமான அளவு தடுக்க வேண்டும்.  நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதைத் தவிர்த்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். 

rally

இதையெல்லாம் பின்பற்றுவதை தவிர்த்தால் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மிகப்பெரிய துரோகம் செய்வதாக அமைந்துவிடும்” என்கிற பிரச்சாரத்தையும் முன்னெடுக்க சொல்லியிருக்கிறாராம் ரஜினி. 
“யார் என்ன சொன்னாலும், பதில் பேசாதீர்கள். உங்கள் பகுதி மக்களின் மனசை வெல்லுங்கள். மக்களின் மனசை வென்றால் தான் தேர்தலில் வெல்ல முடியும். 

தேர்தல் நேரத்தில் வேலைப் பார்க்காமல் இப்போதிலிருந்தே தேர்தலுக்கான வேலைகளைப் பாருங்கள்’ என்பது அனைத்து மாவட்டங்களுக்கும் தலைவரின் உத்தரவாம்.

2018 TopTamilNews. All rights reserved.