• November
    15
    Friday

Main Area

Main



கருணாநிதி சிலை திறப்பு விழா: பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

rajinikanth
rajinikanth

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது.

புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், நாளை திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள்  கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும்  இதனை அடுத்து காங்கிரஸ்- திமுக கூட்டணி குறித்து பேசவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.