“ரஜினி பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டார்” : மன்ற நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

 

“ரஜினி பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டார்” : மன்ற நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

ரஜினி உடல் நிலை சரிஇல்லை என்று பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ். ராஜன் விமர்சித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ,சிறுபான்மை அணி இணைச் செயலாளர் சதீஷ் பாபு ,மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ரஜினி மக்கள் மன்றத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டை மீறி , மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.

“ரஜினி பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டார்” : மன்ற நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ். ராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “1986ல் இருந்தே ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ளேன். அவர் 2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த போது நான் காங்கிரஸில் வகித்து வந்த மாநில விவசாய அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். ஆனால் ரஜினி என்னை மட்டும் ஏமாற்றவில்லை; ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றியுள்ளார். எந்திரன் படத்தை 800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தான் அரசியல் கட்சி துவங்குவதாக தந்திரமாக அறிவித்துள்ளார்.

“ரஜினி பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக்கொண்டார்” : மன்ற நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

உயிரே போனாலும் தமிழக மக்கள் தான் முக்கியம் என்று கூறிய ரஜினி உடல் நிலை சரிஇல்லை என்று பொய்யாக நடித்து மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். என்னை ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கியதை நான் சும்மா விடமாட்டேன். என் மனதை பாதித்து விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெயரில் 13.50 லட்சம் ரூபாய்க்கு நற்பணிகள் செய்து உள்ளேன். மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்” என்று கூறியுள்ளார். இதேபோல் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு நிர்வாகியான சிறுபான்மை அணி செயலாளர் சதீஷ் பாபு , மன்றத்திலிருந்து இதற்கான உரிய விளக்கம் அளிக்காவிட்டால் ராகவேந்திரா மண்டபத்தில் தீக்குளிப்பேன் என்றார்