எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு யாருக்கு?

எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு  யாருக்கு?

அசோக் கஸ்தி மறைவால் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக அபிமானிகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கர்நாடக எம்.பி. அசோக் கஸ்தி. இவர் கடந்த செப்டம்பர் மாதம்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற நிலையில் அசோக் கஸ்தி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு  யாருக்கு?

இதனால் காலியாக இருக்கும் அசோக் கஸ்தியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக அசோக் கஸ்தி இடம்பெற்று வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு  யாருக்கு?

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பது பாஜகவுக்கு புதிதல்ல. எனவே இந்த முறை தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாஜக தலைமை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் என்று கூறப்படுகிறது.

எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு  யாருக்கு?

இந்த வேட்பாளர் பட்டியலில் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ரஜினிகாந்த், தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ரஜினி இன்னும் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

எம்.பி. பதவிக்கான பரிந்துரையில் ரஜினி – குஷ்பு – அண்ணாமலை : வாய்ப்பு  யாருக்கு?

அதே சமயம் அரசியல் களத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் தீவிரமாக உள்ளனர். எனவே இந்த மூவரில் ஒருவருக்கு நிச்சயம் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.