அண்ணாமலையுடன் கைகோர்த்த ரஜினி ரசிகர்கள்

 

அண்ணாமலையுடன் கைகோர்த்த  ரஜினி ரசிகர்கள்

எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொன்ன ரஜினிகாந்த், தனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து மேலும் தான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்பதை உறுதி செய்தார்.

அண்ணாமலையுடன் கைகோர்த்த  ரஜினி ரசிகர்கள்

இதையடுத்து ரஜினி மன்றத்தினர் பல்வேறு கட்சிகளிலும் இணைந்து வருகின்றனர் . பெரும்பாலானோர் ஆளும் திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர் இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணைந்து உள்ளனர்.

அண்ணாமலையுடன் கைகோர்த்த  ரஜினி ரசிகர்கள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குமரன் பாஜகவில் இணைந்தார். அவருடன் 200க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.

அண்ணாமலையுடன் கைகோர்த்த  ரஜினி ரசிகர்கள்
ann

சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி எதையும் நிறைவேற்றவில்லை என்பதை கண்டித்தும், விரைந்து நிறைவேற்ற கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குமரன் தலைமையிலான ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.