ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு

 

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு

நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரத்தில் ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் பெறவும், தமிழத்தின் முதலமைச்சராக வர வேண்டியும் ரசிகர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தினர். அதிகாலை 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் செந்தில் செல்வா தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், ராமநாதசுவாமி கோயிலில சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு

நடிகர் ரஜினிகாந்தி பிறந்தநாளையொட்டி, கோவை சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோயிலில் ஆயுஷ் ஹோமம் நடைபெற்றது. இந்த யாகத்தில் ரஜினி மக்கள் மன்ற செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமையில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு, ரஜினி நீண்ட ஆயுள் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழை எளிய பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அத்துடன், நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், படடாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நன்மைதருவார் கோவிலில், ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஐயப்ப சுவாமி மற்றும் மகா காளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற ராஜ ஹரிகாந்த் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்திற்கு வாக்குகளை உறுதிசெய்ய, ஒரு கோடி பேரை சேர்க்கும் மிஸ்டுகால் இயக்கமும் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுமித்ரா குணசேகரன், ஆதரவாளர்களுடன் ரஜினி மன்றத்தில் இணைந்தார்