ரஜினி என்ட்ரி – திமுக ஷாக்

 

ரஜினி என்ட்ரி – திமுக ஷாக்

ஆகக் கடைசியில் புலி வந்துவிட்டது. ‘இதோ வருகிறேன், அதோ வருகிறேன்’ என கடந்த 25 வருட காலமாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ரஜினி வரும் ஜனவரி 1ல் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு எல்லா கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் திமுகவில் இதன் தாக்கம் ரொம்ப அதிகமாகவே உள்ளது.

ரஜினி என்ட்ரி – திமுக ஷாக்


’பாட்சா’ பட விழாவின்போது இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ரஜினி குற்றம் சாட்டியதுதான் அவரது அரசியல் எண்ட்ரிக்கான முதல் படி. இந்த சமயத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இயல்பாகவே ரஜினி அதிமுக எதிர்ப்பாளராக முத்திரை குத்தப்பட்டார். ரஜினி மீது குத்தப்பட்ட இந்த முத்திரையை மேலும் அதிகப்படுத்தும் வேலையை திமுக செய்தது.
96 சட்டமன்றத் தேர்தலில் ரஜினி வெளிப்படையாகவே திமுக கூட்டணியை ஆதரித்தார். 98ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோதிலும் திமுக கூட்டணியை தூக்கிப் பிடித்தார். கருணாநிதி பங்கேற்ற பல விழாக்களில் கலந்துகொண்டு அவரை புகழ்ந்து பேசினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முரசொலி பவள விழாவிலும் பங்கேற்றார். இப்படியாக ஒரு திமுக ஆதரவாளராகவே ரஜினி தன்னை வெளிப்படுத்தி வந்ததால் அவரது ரசிகர்களும் ஏறத்தாழ அதே மனநிலையில்தான் இருந்தனர். இந்தநிலையில்தான் ’ஆன்மிக அரசியல்’ என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு திமுகவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறார் ரஜினி.

ரஜினி என்ட்ரி – திமுக ஷாக்


அரசியல் பிரவேசம் தொடர்பான தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி வெளியிட்டது முதல் திமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. திமுகவில் ஒதுங்கியிருப்பவர்களும், ஓரங்கட்டப்பட்டவர்களும் ரஜினி பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி இதில் முதல் ஆளாக இருக்கிறார். இந்த அணிமாறல் திமுகவிற்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதுபோக, இதுவரை தேர்தல்களின்போது திமுகவை தாங்கிப் பிடித்து வந்த ரஜினி ரசிகர்களின் ஆதரவை அந்தக் கட்சி அடியோடு இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஜினி என்ட்ரி – திமுக ஷாக்


உச்சபட்சமாக ரஜினி தனது அரசியலை ஆன்மிக அரசியல் என்றே அறிவித்திருக்கிறார். இது இந்து எதிர்ப்பு அரசியல் செய்துவரும் திமுகவை நிலைகுலையச் செய்திருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாவது; ‘’ காலம் கடந்தாலும் ரஜினி தனது முடிவை தெளிவாக சொல்லிவிட்டார். அவர் முன்னெடுக்க இருக்கும் ஆன்மிக அரசியல், திமுகவின் இந்து எதிர்ப்பு அரசியலுக்கு நேர் எதிரானது. திமுகவின் இந்து துவேஷம் பற்றி மற்றவர்கள் சொல்வதற்கும், ரஜினி சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எனவே இதுவரை திமுகவிற்கு வாக்களித்து வந்த இந்துக்கள் ஆதரவில் மிகப் பெரிய சரிவு ஏற்படும். ஆக மொத்தத்தில் ரஜினியின் அரசியல் நுழைவு திமுகவிற்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தப் போவது நிச்சயம்’’ இவ்வாறு அவர் கூறினார்.