• February
    29
    Saturday

Main Area

Main



தர்பார் விழாவுக்கு அழைத்த ரஜினி... போகவிடாமல் தடுத்த சீமான்..!?

ரஜினி
ரஜினி

ரஜினியின் தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்தி முடித்தது லைகா நிறுவனம். இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகைச்சேர்ந்த  பலரையும் அழைத்து வந்து விடவேண்டும் என்கிற முடிவில் இருந்திருக்கிறது. இதனால் படத்தில் நடிக்காதவர்களுக்கும் போன் போட்டு அழைத்திருக்கிறார்கள். 

darbar

விவேக்கை அழைத்தபோது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கொடுக்காமல் விழாவில் பேச மட்டும் அழைத்தால் எப்படி என்று குரல் வந்திருக்கிறது. இந்த காரணத்தையே பலரும் சொல்லியதால் லைகா நிறுவனத்தினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இதே போல இயக்குநர் பாரதிராஜாவையும் அழைத்து விழாவில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் தனது ஒம் படத்தை வாங்கி வெளியிட லைகா மறுத்ததால் அந்த கோபத்தில் போக மறுத்து விட்டார். பிறகு தொடர்ந்து போன் போட்டு வற்புறுத்தியதால் சம்மதித்தார். 

seeman

ஆனால் விழா நாளன்று பாரதிராஜாவை தொடர்பு கொண்ட சீமான் “அப்பா இந்த விழாவில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது. எனக்காக இதை செய்யுங்கள்” என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இதனால் கடைசி நேரத்தில் பாரதிராஜா இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டாராம்  இந்த மனவருத்தத்தில்தான் ரஜினி தர்பார் மேடையில் பேசும்போது, ‘16 வயதினிலே’ படத்தில் படத்தில் தனக்கு நடந்த அவமனத்தை நாசூக்காக சொல்லி பேசியிருப்பதாக சொல்கிறார்கள். இது பாரதிராஜாவை இன்னும் அதிகமாக டென்சன் படுத்தியிருக்கிறதாம். 

lawrence

இதே மேடையில் சீமானை லாரன்ஸ் விமர்சித்து பேசியதற்கும் பாரதிராஜாவை விழாவிற்கு வரவிடமால் செய்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. சீமான் பாரதிராஜாவிடம் பேசியதை லைகா நிறுவனம் லாரன்ஸிடம் சொன்னதாகவும் அதன் பிறகுதான் லாரன்ஸ் சீமானை தாக்கி பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை ரஜினியிடமும் சொல்லியிருக்கிறாரகள். கேட்டு விட்டு ஷாக் ஆனாராம் ரஜினி.

2018 TopTamilNews. All rights reserved.