• February
    27
    Thursday

Main Area

Main



மன்னிப்பு கேட்பார் ரஜினி... உதயநிதி பேட்டி

உதயநிதி
உதயநிதி

பெரியார் பற்றி உண்மை தெரியாமல் ரஜினி பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார் என்று உதய நிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

udhaya

துக்ளக் விழாவில் பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி, "நான் கற்பனையாக எதையும் கூறவில்லை. பத்திரிகைகளில் வந்ததைத்தான் கூறியிருந்தேன். எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.

raji

இந்த நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "ரஜினி தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். ஏற்கனவே காவிரி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு, பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார்" என்று கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.