• March
    31
    Tuesday

Main Area

Main



கதறடிக்கும் ரஜினி... கண்டதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு பெரியார் விஷயத்தில் சீற்றம்..!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினியின் செயல்பாடுகளை திரும்பிப் பார்த்தால் பலமுறை அவர் அரசியல் ஆளுமைகளின் கருத்திற்கும், கண்டனத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறார்.

சிகரெட் பிரச்னையை பாமக கண்டித்ததற்கு பிறகு, சந்திரமுகி படத்தில் இருந்து புகை பொருட்களை பயன்படுத்தவில்லை. தன்னுடைய பெண் திருமணத்திற்கு வீடு தேடி சென்று ராமதாஸிற்கு பத்திரிகை வைத்து சமரசமானார். பாபா பாடத்தில் பெரியார், இராஜாஜி இருவரையும் ஒப்பிட்டு, பாடல் வரிகள் வரும். அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்தார்.

உடனே அவரை தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டு, ஆடியோ கேசட்டில் தவிர்க்க முடியாது. ஆனால், திரைப்படத்தில் அந்த பாடல் வரி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கி.வீரமணியிடம் வாக்குறுதி கொடுத்தார். உடனே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  தான் எழுதிய கீதையின் மறுபக்கம் என்கிற நூலை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார்.

rajini

கன்னடர் என்கிற விமர்சனம் வந்தபோது விடுதலைப் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் வானாளாவ புகழ்ந்து மேடையில் பேசினார். நடிகர் விவேக்கின் மதியுகத்தை வைத்து அவரை பிராமணன் என்றுதான் நினைத்தேன் என்று பேசியதற்கு தேவர் அமைப்புகள் மெல்லிதாக தங்கள் கண்டனத்தை பதிவு செய்தன. அதனையும் உடனடியாக உள்வாங்கி கொண்டார். இதே போல் வட்டாள் நாகராஜன், பால்தாக்கரே போன்றோரிடமும் பலமுறை சமதானமாகியிருக்கிறார்.

jayalalitha

ரஜினி துணிச்சலாக எதிர்த்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996 தேர்தல் சமயத்தில் மட்டுமே அந்த துணிகர சம்பவம் நடந்தது. அதன் பிறகு, ஜெயலலிதா ஆட்சியில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவிற்கு ட்ரிபிள் வி பட்டம் கொடுத்தார். அதாவது டிரிபிள்வி. அதன்பொருள் வீராணம், வீரப்பன், வெற்றி இதுதான் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.

அதே 96 தேர்தலில் மனோரமா ரஜினிகாந்தை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தல் முடிந்ததும் ரஜினி தன்னுடைய அருணாச்சலம் படத்தில் மனோரமாவிற்கு வாய்ப்பு தந்து மரியாதை செய்தார். திருமாவளவன், வேல்முருகன் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

periyar

சூப்பர் ஸ்டார்கள் யாரையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி பகைத்துக் கொண்டால் அவர்கள் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார்கள் இப்படித்தான்  என ஏளனம் பேசி வந்தார்கள். ஆனால், இனி தது பாதை பூபாதை அல்ல. சிங்கப்பாதை என முடிவெடுத்துள்ள ரஜினி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பெரியார் பற்றிய பேச்சுக்களில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக மன்னிப்பு கேட்கச் சொன்னவர்களை திருப்பி அடித்து கதறடித்துக் கொண்டிருக்கிறார். 

2018 TopTamilNews. All rights reserved.