• November
    19
    Tuesday

Main Area

Mainசிவக்குமாரின் அதிகபிரசங்கித்தனத்தால உருவான ரஜினியும், அமிதாப்! வெளியான அதிர்ச்சி தகவல்!

ரஜினி,சிவகுமார்
ரஜினி,சிவகுமார்

1977-ல் எஸ்.பி முத்துராமன் ஒரு படம் செய்தார். அந்தக் காலத்துக்கு கொஞ்சம் தைரியமான கதை. நாகராஜும், சம்பத்தும் நெல்லையைச் சேர்ந்த சில்லறை துணி வியாபாரிகள். நெருங்கிய நண்பர்கள். சம்பத் ஒரே ஒரு பெண்ணை காதலித்து அவள் மாடு முட்டி செத்துப் போக விரக்தியில் வியாபாரத்தை விட்டு விட்டு நண்பன் நாகராஜிடம் உதவியாளனாகிறான்.

s.p.muthuraman

நாகராஜ் ப்ளேபாய். நாகராஜ் தன்னால் ஏமாற்றப்பட்டவனின் தங்கையை ஏமாற்றி கர்ப்பமாக்கி கைவிட்டு விட்டு வேறொரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். நாகராஜால் கர்ப்பமான பெண்னுக்கு அன்றைய வழக்கப்படி சம்பத் 'வாழ்வு' கொடுக்கிறான்.
அவளுக்குப் பிறக்கும் குழந்தையை காப்பாற்றி தியாக தீபமாக உயிர் விடுகிறான்.
நாகராஜ் நிலை தலைகீழாக மாறிவிடுகிறது. செய்த பாவங்களால், ஆண்மை இழந்து, திருடிச் சேர்த்த சொத்துக்களுக்கு வாரிசும் இல்லாமல் நொந்து கிடக்கிறான்.
இந்த கதையில் தியாக தீபமாக நடிகர் சிவகுமாரையும், கெட்டவன் நாகராஜாக ரஜினிகாந்தையும் நடிக்க வைக்க முடிவு செய்த எஸ்.பி முத்துராமன் அன்று முன்னணி நடிகரான சிவகுமாரைச் சந்தித்து கதையைச் சொன்னார்.

rajini and sivakumar

கதையைக் கேட்ட சிவகுமாருக்கு, எவ்வளவு நாளைக்குத் தான் நான் நல்லவனாகவே நடிக்கிறது என்று தோன்றி இருக்க வேண்டும். ஒரு ரொமான்ஸோ, பாட்டோ இல்லாத சம்பத்தாக நடித்து அழுது வடிவதை விட பிளேபாய் நாகராஜனாக நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
ரஜினி அப்போது கதை கேட்டு முடிவு செய்யும் அளவுக்கு வளரவில்லை. இது அவருக்கு பத்தாவது படம் தான். ஆகவே உடனே ஒப்புக் கொண்டார்.
அது தான் புவனா ஒரு கேள்விக்குறி! படம் ரிலீசாகி ஹிட்டடித்தது. இளையராஜாவின் ' கண்மணி உன் காதலன்' உள்ளிட்ட பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்தன. ஆனால், பாவம் சிவகுமார், மெரினா பீச்சில் சுமித்திராவின் ஜாக்கெட்டுக்குள் நண்டைப் பிடித்துப் போட்டு அவர் செய்த ரொமான்ஸ் எல்லாம் எடுபடவில்லை!

bhuvana oru kelvikuri

தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டு 'நாகராஜ் அண்ணே கும்பிடறண்ணே' என்று ரஜினி போட்ட அந்த ஒற்றைக் கும்பிடு சிவகுமாரை ஓரம் கட்டி, புவனா ஒரு கேள்விக்குறியை ரஜினி படமாக்கி விட்டது.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முத்துராமன், சிவகுமார், சுமித்திரா, ரஜினி எல்லோரையும் ஊர் ஊராக அழைத்துப் போய் படம் ஓடும் திரையரங்குகளில் கூட்டம் போடுவாராம்.
அதில், சிவகுமார் பேச ஆரம்பித்ததுமே ரசிகர்கள் 'ரஜினியை பேசச் சொல்லு' என்று கூச்சலிடுவார்களாம். அதனால் ரஜினியை பேச அழைப்பாராம் முத்துராமன். ஸ்டைலாக நடந்து வந்து மைக் முன் நின்று ரசிகர்களை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு' சிவகுமார் அண்ணன் பேசறதக் கேளுங்க,எனக்குப் பேச வராது' என்று சொல்லி விட்டு இருக்கைக்கு திரும்பி விடுவாராம்.
சிவகுமாரே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்ன தகவல் இது. தான், தனக்குப் பொருத்தம் இல்லாத கேரக்ட்டரை தேர்ந்தெடுத்ததால் தான் ரஜினி ஹீரோவானார் என்று சிவகுமார் பலமுறை புலம்பி இருக்கிறார். இப்படி 1977-ல் சிவகுமார் தவற விட்டதை 42 வருடம் கழித்து அவரது மகன் கார்த்தி கைப்பற்றி இருக்கிறார். அதுதான் ' கைதி'!

kaithi

‘மாநகரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவனத்துக்கு உள்ளான லோகேஷ் கனகராஜ் அடுத்து ரெடி செய்த கதை தான் ‘கைதி’. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும், ஹீரோயிசம் பற்றிக் கவலைப்படாமல் கிடைத்த வேடத்தில் ஸ்கோர் செய்வதிலும் முன்னணியில் இருக்கும் விஜயசேதுபதியை மனதில் வைத்துத் தான் இந்தக் கதையைச் செய்தார் லோகேஷ் கனகராஜ்.

விஜய சேதுபதிக்கும் கதை ஓக்கே. தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது. ஆனால், விஜயசேதுபதிக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் ஒத்துப் போகாததால் விஜயசேதுபதி படத்தில் இருந்து விலகிக் கொள்ள கார்த்திக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

இப்போது விஜயசேதுபதி வயிறெரிய கார்த்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறார். கைதி இரண்டாம் பாகம் வேறு வரப்போகிறதாம். லோகேஷ் கனகராஜ் அடுத்த லெவலுக்குப் போய் விஜய்யை இயக்கிக் கொண்டு இருக்கிறார். ஒரே ஆறுதல் அந்தப் படத்தில் விஜய சேதுபதிக்குக் கிடைத்த வில்லன் வேடம்தான், பாவம்.

vijay and vijaysethupathi

ஷோலே படத்திலும் தர்மேந்திரா உதறிய வேடத்தில் நடித்துத் தான் அமிதாப் பச்சன் சூப்பர் ஸ்டார் ஆனார் என்று ரமேஷ் சிப்பி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். இதை படித்தாலாவது சிவகுமாரின் மனது ஆறுதலடையட்டும்!

2018 TopTamilNews. All rights reserved.