kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


மத்திய அரசின் கைக்கூலியாக ரஜினி செயல்படுகிறார் - வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக சாடல்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Loading...

தனது கருப்பு பணத்தை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் செயலை ரஜினிகாந்த் தெள்ளத்தெளிவாக செய்து கொண்டு வருகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையாக சாடியுள்ளார்.

மயிலாடுதுறையில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்தை எதிர்த்து மாநாடு நடத்தப்பட்டது. 

velmurugan

இதில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக செய்து வருகிறது. 

குறிப்பாக, விவசாயிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டம் முற்றிலும் முதுகில் குத்தும் செயலாகும். புயல் காரணமாக டெல்டா பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிவாரணத்தை அளிக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதியை பாலைவனமாக்கும் செயலிலேயே ஈடுபடுகிறது. 

இதுகுறித்து ஒருமுறையாவது ஆன்மீக அரசியல் செய்ய காத்திருக்கும் ரஜினிகாந்த் ஏதேனும் பேசி இருப்பாரா? மக்கள் நலனுக்காக எந்த விதத்தில் அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்? என கேள்விகள் எழுப்பினார். 

rajini

அவர் படம் வெளியாகி நன்றாக கல்லா கட்டினால் போதும் அதில் வருகின்ற கருப்பு பணத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இருக்கிறார். தனது கருப்பு பணத்தை காப்பாற்றிக் கொள்ளவே மத்திய அரசு செய்யும் செயலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என ரஜினிகாந்தை வேல்முருகன் கடுமையாக சாடினார். 

மேலும் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்தும், தமிழகத்திற்கு இனி எந்தவித அணுஉலை திட்டமும் தேவையில்லை என்றும் இந்தக் கூட்டத்தின் மூலம் தமிழக அரசிற்கு வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

2018 TopTamilNews. All rights reserved.