டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

 

டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

அதிமுகவில் இருந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக அதிகம் பேசி வந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அம்மா என்று ஜெயலலிதாவை அழைத்து வந்தவர், அவரின் மறைவுக்கு பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்.

டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

கடந்த ஆட்சியில் திமுகவையும் மு. க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆத்திரப்பட்ட மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அமைச்சர்களின் மீதுள்ள ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும். ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் விசாரிக்கப்படப்போகும் நபர் ராஜேந்திரபாலாஜி தான் என்று எச்சரித்திருந்தார். ராஜேந்திரபாலாஜியை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம். அதிமுகவில் சிறைக்கும் செல்லும் முதல் நபர் ராஜேந்திரபாலாஜிதான் என்றும் கடுமையாக சொல்லியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

அதன்படியே திமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வேகம் பிடித்திருக்கிறது. பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அதுகுறித்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம் என்று ஸ்டாலின் எச்சரித்தது உண்மையாகும் நிலை இருக்கிறது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

ராஜேந்திர பாலாஜி நாளை பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்திக்கிறார். தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு இருக்கிறார். இதனால் ராஜேந்திர பாலாஜி தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் இணைகிறார் இன்று ஒரு தகவல் பரவுகிறது.

டெல்லியில் ராஜேந்திரபாலாஜி – பாஜகவில் இணைகிறாரா?

அவர் அமைச்சராக இருந்தபோது பாஜகவில் சேரப் போகிறார் என்று பலரும் சொல்லி வர, அவர் பாஜகவில் சேர்ந்தால் என்ன சேராவிட்டால் என்ன அவர் பெயருக்குத்தான் அதிமுகவில் இருக்கிறார். ஆனால் அவர் பாஜக ஆள்தான் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.