ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு; சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூற இடைக்கால தடை!

 

ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு; சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூற இடைக்கால தடை!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சேனை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது. வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். மூன்றாவது நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு தடைக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு; சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூற இடைக்கால தடை!

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. கடந்த 17ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை 20ஆம் தேதி நடைபெற உள்ளதால் அதுவரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

அதன் படி, இன்று உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீடு வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு தடை இல்லை என்றும் தெரிவித்தனர்.