”ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால் திமுகவிற்கு பீகாரிலிருந்துதான் வேட்பாளர்கள் வரவேண்டும்”

 

”ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால் திமுகவிற்கு பீகாரிலிருந்துதான் வேட்பாளர்கள் வரவேண்டும்”

மதுரை விரகனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “திமுகவின் ஐ பேக்கை மக்கள் கோ பேக் என சொல்கிறார்கள். ஐ பேக்கை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. ஐ பேக் கருத்து கணிப்பில் தற்போதுள்ள திமுகவின் 85 சட்டமன்ற உறுப்பினர்களில் 75 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சீட்டு வழங்க கூடாது என தெரிவித்துள்ளதால் அவர்கள் மூலமாகவே திமுக கட்சியை ஊத்தி மூடிவிடுவார்கள். முக.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றால் திமுகவிற்கு பீகாரிலிருந்து வேட்பாளர் வரவேண்டிய நிலை உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு குறையாமல் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்

”ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால் திமுகவிற்கு பீகாரிலிருந்துதான் வேட்பாளர்கள் வரவேண்டும்”

மு.க.ஸ்டாலின் சர்க்கரை என எழுதி கொடுக்கிறார், எழுதி கொடுத்தால் இனிக்காது, ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே சர்க்கரையை மக்களுக்கு கொடுக்கிறார். மு.க.ஸ்டாலின் திமுகவை நாடக கம்பெனியாக மாற்றிவிட்டார். அறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவோ கலைஞர் கையில் இருந்த திமுகவோ தற்பொழுது இல்லை. ஐபேக்கை நம்பி திமுக கட்சி நடத்தி வருகிறது. ஐபேக் எழுதிக்கொடுக்கும் நபர்களுக்கு சட்டமன்ற தொகுதியில் இடமும், மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஐ பேக் பின்னால் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

அண்ணா, கலைஞர் காலத்தில் அறிவாலயத்திற்கு சீட்டு கேட்டு செல்லும் நிலை மாறி தற்போது பாட்னாவிற்கு சீட்டு கேட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியினரே வெற்றியை விரும்பவில்லை. டெல்லிக்கு சென்று பாதுகாத்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை” எனக் கூறினார்.