Home அரசியல் ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது; அதனாலேயே கட்சி தொடங்கியுள்ளார்- ராஜேந்திர பாலாஜி

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது; அதனாலேயே கட்சி தொடங்கியுள்ளார்- ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “கொரோனோ பாதித்த நேரத்தில் ஸ்டாலின் மக்களை சந்தித்தாரா? கொரோனா காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது ஊர் ஊராக சென்று ஆய்வுகூட்டங்களை நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. 2ஜியில் ஊழல் செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளார். அதனால் தான் ராசாவை ஸ்டாலின் கூடவே வைத்துள்ளார். ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வரவேண்டும் நான் வருகிறேன். திமுக தயாரா? பொறாமையுடன் எப்படியாவது அவதூறு பரப்பி ஆட்சியை கைப்பற்றி விடலாம் என கனவு காணும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் பொதுமக்கள் சம்மட்டி கொடுப்பார்கள். உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் இயக்கம் அதிமுக. எடப்பாடியை பற்றி பேச ஆ.ராசாவிற்கு என்ன யோக்கியதை உள்ளது? எடப்பாடியை பற்றி பேச ஸ்டாலினுக்கோ ஆ.ராசவிற்கோ தகுதியில்லை

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது; அதனாலேயே கட்சி தொடங்கியுள்ளார்- ராஜேந்திர பாலாஜி

நாங்கள் சொத்து பட்டியலை தற்போதே வெளியிடுவோம் ஆ.ராசாவால் சொத்துப்பட்டியலை வெளியிடமுடியுமா? சைக்கிளில் சென்றவர் ஆ.ராசா தற்போது எப்படி வெளிநாட்டு காரில் செல்கிறார். காங்கிரஸிடம் தான் திமுக அடமானத்தில் உள்ளது நாங்கள் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைக்கவில்லை பாஜகவினர் செய்யும் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறோம். விக்கிரபாண்டி மற்றும் நாங்குநேரியில் வெற்றி பெற்றதால் எடப்பாடி அரசுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவோடு தான் எடப்பாடி ஆட்சி நடத்துகிறார். பாஜக அமெரிக்காவில் உள்ளதா? மக்கள் ஓட்டு போட்டு தான் மோடி பிரதமர் ஆகியுள்ளார். ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது , அதனால் கட்சி ஆரம்பித்துள்ளார். மொத்தத்திற்கு அனைவரும் சேர்ந்து திமுகவை கும்மியடிக்க போகிறோம்

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது; அதனாலேயே கட்சி தொடங்கியுள்ளார்- ராஜேந்திர பாலாஜி

ரஜினி ஜனவரில் கட்சி ஆரம்பித்து மாவட்டச்செயலாளர்களை நியமிக்கட்டும் அதன் பின் கூட்டணி பற்றி பேசலாம். புயல் பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசிடம் இருந்து போராடி பெறுவோம், தமிழகத்தை தாக்க வந்த புயல் வலுவிழந்து அப்படியே யுடேர்ன் போட்டு திரும்பி சென்றது. இதுதான்
ஆன்மீக ஆட்சி அதிமுக ஆட்சி. நான்கு ஐந்து பேர் மருத்துவம் படித்து வந்த நிலையில் தற்போது எடப்பாடியார் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டினால் ஏராளமான ஏழை அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது எடப்பாடி அரசு தான்” எனக் கூறினார்.

ரஜினிக்கு சுயசிந்தனை உள்ளது; அதனாலேயே கட்சி தொடங்கியுள்ளார்- ராஜேந்திர பாலாஜி

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும்...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும்! அடித்துக்கூறும் எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படலாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிர் பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.35 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.46 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
TopTamilNews