முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு!

 

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு!

முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் தீர்க்கப்படாமல், தேர்தல் பணிகளில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது என்கிற இக்கட்டான சூழலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்புக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. அக்டோபர் 7 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு!

இதனிடையே முதல்வரும், துணை முதல்வரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று காலை கடம்பூர் ராஜூ முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அமைச்சர் செங்கோட்டையனும் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார்.