ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

 

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

தற்போதைய நிலவரத்தின் படி திமுக 160 தொகுதிகளிலும் அதிமுக73 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அமைச்சர்கள் எம்ஆர் விஜய பாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, ராஜலட்சுமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி!

இச்சூழலில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் தோல்வி கண்டார். அவரைத் தொடர்ந்து தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜியும் தோல்வியைத் தழுவியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் தோல்வி முகத்தில் இருக்கின்றனர்.