காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது, அது இறைவனின் அடையாளம்- ராஜேந்திர பாலாஜி

 

காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது, அது இறைவனின் அடையாளம்- ராஜேந்திர பாலாஜி

இத்தனை நாட்களாக ஊடகம் முன்பு தோன்றாத நான், சாமி கும்பிடுவது, புத்தகம் படிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அரசு நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது போன்ற பணிகளை செய்துவந்தேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது. அது இறைவனின் அடையாளம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை இறைவனாக நினைத்துப் காவித் துண்டைப் போட்டிருப்பார். மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவில்லையே என்ற எந்தவருத்தமும் எனக்கு இல்லை. மாவட்ட பொறுப்பாளர் என்பதே மாவட்டச் செயலாளர் செய்யும் பணி போன்றதுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் வெற்றிக்காக முழுமையாக பாடுபட்டு அதிமுகவை வெற்றியடைய செய்வேன்

காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது, அது இறைவனின் அடையாளம்- ராஜேந்திர பாலாஜி

ஊரடங்கால் கட்சி நிகழ்ச்சிகள் இல்லை அதனால் மக்களின் நலனுக்காக உழைத்துவருகிறேன். அமெரிக்க அதிபரிலிருந்து வல்லரசு நாடுகளே மீடியாக்களை சந்திக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில், இந்திய பிரதமரும் முதலமைச்சர் பழனிசாமி மக்கள் துயர்துடைக்க ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளைப் பெரிதாக நினைத்து பேசினால் மக்கள் விரும்ப மாட்டார்கள்” எனக்கூறினார்.