நாளை வழக்கு விசாரணை-இன்று மருத்துவமனையில் அனுமதி! ராஜேந்திரபாலாஜியின் பிளான்

 

நாளை வழக்கு விசாரணை-இன்று மருத்துவமனையில் அனுமதி! ராஜேந்திரபாலாஜியின் பிளான்

சொத்து குவிப்பு வழக்கில், ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை வரவுள்ளது.

நாளை வழக்கு விசாரணை-இன்று மருத்துவமனையில் அனுமதி! ராஜேந்திரபாலாஜியின் பிளான்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறி, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 4ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இரு வேறு தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் 3வது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். . இந்நிலையில், இவ்வழக்கு நாளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையெ இவ்வழக்கில் தமிழ்நாடு அரசும் செப்டம்பர் 3ம் தேதி கேவிட் மனு அளித்தது.

இந்நிலையில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.