எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியை மறைக்க முதல்வர் நிதிஷ் குமாரை தாக்குகின்றன.. ராஜீவ் ரஞ்சன் பதிலடி

 

எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியை மறைக்க முதல்வர் நிதிஷ் குமாரை தாக்குகின்றன.. ராஜீவ் ரஞ்சன் பதிலடி

பீகாரில் கோவிட்-19 மற்றும் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசு எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களிடம் எடுத்து கூறினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா அல்லது வெள்ளம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு கவலையில்லை. தங்களது தோல்விகளை மறைக்க முதல்வர் நிதிஷ் குமாரை தாக்குகின்றன. அழிந்து கொண்டு இருக்கும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை எப்படி மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம் என்பதை எதிர்க்கட்சிகள் பார்க்க வேண்டும், அது தொற்றுநோயை சமாளிக்கும் திறன் கொண்டது, அதனுடன் வெள்ளங்களை சமாளிக்க நாங்கள் எடுத்த பேரழிவு நிர்வாக முடிவுகளையும் கவனிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியை மறைக்க முதல்வர் நிதிஷ் குமாரை தாக்குகின்றன.. ராஜீவ் ரஞ்சன் பதிலடி

மாநிலத்தில் வெள்ள நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது ஆனாலும் மாநில அரசு அதனை சமாளிக்க தயாராகவே உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் மகாராஷ்டிராவில் மட்டும் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டன. ஆனால் அவர் பீகார் நிலவரம் குறித்து ராகுல் காந்தி கருத்து சொல்கிறார்.

எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியை மறைக்க முதல்வர் நிதிஷ் குமாரை தாக்குகின்றன.. ராஜீவ் ரஞ்சன் பதிலடி

ராகுல் காந்தி, பழம் பெரும் கட்சியின் மூத்த தலைவர் என்ற தனது பொறுப்பு அடிப்படையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேச வேண்டும். கடந்த ஒரு வாரமாகத்தான் பீகாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் நாம் அதை பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், கடந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் பீகார் மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்வோம். முதல்வர் நிதிஷ்குமாரின் வழிகாட்டுதலின்கீழ், கோவிட்-19ஐ கையாள ஒவ்வாரு ஆக்கப்பூர்வமான ஆலோசனையையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். முன்பை விட சிறப்பாக ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம். விழிப்புணர்வுடன் மாநில மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலை நம்மால் பின்பற்ற முடிந்தால், இந்த சூழ்நிலையை நாம் சிறப்பாக சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.