விடைபெற்றார் அசோக் லவாசா…. தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்

விடைபெற்றார் அசோக் லவாசா…. தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்

மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் செயலர் ராஜீவ் குமார் நேற்று இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.

இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த அசோக் லவாசா, ஆசிய மேம்பாட்டு வங்கியில் துணை தலைவர் பணிக்கு செல்வதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து லவாசா இடத்துக்கு மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டார். 1984ம் ஆண்டு ஜார்க்கண்ட் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் குமார்.

விடைபெற்றார் அசோக் லவாசா…. தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்
ராஜீவ் குமார்

ராஜீவ் குமார் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் அசோக் லவாசா கடந்த 31ம் தேதியோடு பதவியிலிருந்து விடைபெற்றார். இதனையடுத்து ராஜீவ் குமார் நேற்று இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் ராஜீவ் குமார் நேற்று இணைந்தார்.

விடைபெற்றார் அசோக் லவாசா…. தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்
அசோக் லவாசா

நிதித்துறை செயலராக பணியாற்றி ஒய்வு பெற்ற ராஜீவ் குமார், பேங்க் ஆப் பரோடா, விஜயா மற்றும் தேனா வங்கிகளை ஒன்றாக இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.