ராஜஸ்தானில் காதலித்த வாலிபருக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை… கிராம சாதி பஞ்சாயத்தின் கொடூரம்…

 

ராஜஸ்தானில் காதலித்த வாலிபருக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை… கிராம சாதி பஞ்சாயத்தின் கொடூரம்…

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில், வாலிபர் ஒருவரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைக்கும், சூவில் தண்ணீர் பருக வைக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த வீடியோக்கள் வெளியான சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அந்த வீடியோக்கள் சிரோஹி மாவட்டம் பாலாடி தானா பகுதியில் உள்ள சர்தார்புரா கிராமத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. மேலும் சில அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

ராஜஸ்தானில் காதலித்த வாலிபருக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை… கிராம சாதி பஞ்சாயத்தின் கொடூரம்…

சர்தார்புரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் அந்த பகுதியை சேர்ந்த தனது சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் அந்த கிராமத்து பெரியவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து கிராம பஞ்சாயத்துக்கு கூட்டப்பட்டது. கிராமத்தில் உள்ள மற்ற இளைஞர்கள் இது போன்று காதல் விவகாரங்களில் விழுந்து விடக்கூடாது என்று சம்பந்தபட்ட இளைஞருக்கு தண்டனை வழங்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அந்த இளைஞரை அடித்தனர், சிறுநீரை குடிக்க செய்தனர் மற்றும் சூவில் தண்ணீர் பருகவும் வைத்துள்ளனர். இதனை படம்பிடித்த நபர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ராஜஸ்தானில் காதலித்த வாலிபருக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை… கிராம சாதி பஞ்சாயத்தின் கொடூரம்…

அந்த கிராமம் கால்நடை வளர்ப்பாளர்களின் நாடோடி சமூகமான ரெபாரி சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வாலிபரை அடித்தவர்களில சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட வாலிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டனர். அவர்களது வீடு பூட்டப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலத்திலும் சாதி பஞ்சாயத்துகளின் பிடிப்பு மற்றும் கட்டுப்பாடு இருப்பது சமூகத்துக்கு கவலை அளிக்கும் விஷயம்.