ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
ராஜஸ்தானில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க முயற்சி செய்தது. கடைசியில் அதை காங்கிரஸ் போராடி வீழ்த்தியது. அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார்.

ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் அசோக் கெலாட். இந்த நிலையில் ராஜஸ்தானில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை பிரச்சினையாக்கியது பா.ஜ.க. அவர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸில் இணைந்ததை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து பா.ஜ.க எம்.எல்.ஏ மதன் தில்வார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சட்டப்பேரவை கூட்டப்பட இருந்த நிலையில் சபாநாயகரின் முடிவு தொடர்பாக அவசர முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்றைய விசாரணையின் போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இணைந்தது

ராஜஸ்தான்: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், வழக்கை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தப்பியுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவது இல்லை என்றாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.