பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

 

பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் ராயல்சேலஞ்சர் பெங்களூர் அணியோடு மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

விராட் கோலி தலைமயிலான பெங்களூர் அணி, பாயிண்ட் டேபிளில் 3-ம் இடத்தில் உள்ளது. ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

ராபின் உத்தப்பாவும் பென் ஸ்டோக்ஸூம் ஓப்பனிங் இறங்கியது ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக பட்லரே இறங்குவார். அவருக்குப் பதில் உத்தப்பா இறங்கியிருந்தார். 15 ரன்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் மோரிஸ் பந்து வீச்சில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

தொடக்கம் முதலே அடித்து ஆடினார் உத்தப்பா. ஒரு சிக்ஸர், ஏழு பவுண்ட்ரிகளோடு 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தவர் சஹலின் சுழற்பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இன்றைய ஆட்டம் மூலம், அவர் ஐபிஎல் போட்டிகளில் 4500 ரன்களைக் கடந்திருக்கிறார்.

பெரிது எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், 9 ரன்களில் சஹல் சுழலில் சிக்கி விக்கெட்டைப் பறிகொடுத்தது அதிர்ச்சியாக இருந்தது.

பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

ஸ்டீவ் ஸ்மித் – பட்லர் ஜோடி நிதானமாக ஆடியது. பட்லர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில்மோரிஸ் பந்தில் சைனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் மோரிஸ் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அப்போது அவர் 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார். ராகுல் திவட்டியா 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் இறங்கிய ஆர்ச்சர் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்து, மூன்றாம் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பெங்களுர் அணிக்கு வெற்றி இலக்கு 178

பெங்களூர் அணியில் மோரிஸ் 4 விக்கெட்டுகளியும் சஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 177. பெங்களூர் அணியின் வெற்றி இலக்கு 178 ரன்கள்.

தொடக்கத்தில் நிறைய தடுமாறிய ராஜஸ்தான் அணி 160 ரன்கள் வருவதே கஷ்டம் என நினைத்திருந்த நிலையில் ஸ்மித் ஆட்டத்தால் 177 ரன்களைத் தொட்டது.