பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான்

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

தினம் ஒரு போட்டி என்று நடைபெற்று வந்த ஐபிஎல் 2020 – சீசனில் இரண்டு போட்டிகள் நடைபெறும் முதல் நாள் இன்று.

இன்று மதியம் தொடங்கிய போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வென்றிருக்கிறது. இன்றைய நாளில் எந்த அணிக்கு மூன்றாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ!

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

டாஸ் வின் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். வெயில் அதிகம் இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் இது நல்ல முடிவே. ஃபீல்டிங் செய்ய மாலை நேரமே ஏற்றது என்பதால் சரியான முடிவே எடுத்திருக்கலாம்.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜோஸ் பட்லரும் கேப்டன் ஸ்மித்தும் இறங்கினார்கள். கேப்டன் ஸ்மித் 5 ரன்கள் எடுத்த நிலையில் உடானா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டம் இழந்தார். அடித்து ஆடிய பட்லர், 1 சிக்ஸர், 3 பவுண்ட்ரிகள் அடித்து 22 ரன்கள் எடுத்த நிலையில் சைனி வீசிய பந்தை தேவ்தத் படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

இந்த சீசனில் நன்கு ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் ஒரு ஃபேர் மட்டுமே அடித்த நிலையில் சாஹல் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

சாஹல் அந்தப் பந்தைப் பிடிக்கையில் தரையில் பட்டதா என்று மூன்றாம் நடுவர் செக் பண்ணியே பிறகே அவுட் வழங்கப்பட்டது.

ராபின் உத்தப்பா – லோம்ரோர் இருவரின் பார்டன்ஷிப் மெதுவாக ஆடி ரன் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 70 – ஆக இருக்கையில் ராபித் உத்தப்பா அவுட்டானர். சாஹல் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தபோது 17 ரன்களை எடுத்திருந்தார்.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

ராகுல் திவேட்டியா மீண்டும் இந்தப் போட்டியில் அதிரடி காட்டினார். 12 பந்துகளில் 3 சிக்ஸர்களோடு 24 ரன்கள் விளாசினார். அதேபோல ஆர்ச்சரும் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதனால், அணியின் ஸ்கோர் 154 ஆக உயர்ந்தது.

பெங்களூருக்கு வெற்றி இலக்கு 155 – பேட்டிங்கில் திணறிய  ராஜஸ்தான்

பெங்களூர் பவுலிங்கில் உடானா இரண்டு விக்கெட்டுகளையும் சாஹல் 3 விக்கெட்டுகளையும் சைனி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சாஹல் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் பறித்தார். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் ஏதும் எடுக்க வில்லை. ஆனால், 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து எகானாமி 5.00 ஆக பதிவு செய்தார்.