IPL2021 : பட்லர் அதிரடியில் வீழ்ந்த ஐதரபாத்

 

IPL2021 : பட்லர் அதிரடியில் வீழ்ந்த ஐதரபாத்

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நேற்று நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் உள்ள இடம் அளிக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Image

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 12 ரன்களில் அவுட் ஆக , ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர்.
சாம்சன் நிதானமாக ஆட ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பட்லர் 56 பந்துகளில் சதமடித்தார். சாம்சன் 48 ரன்களிலும்,ஜோஸ் பட்லர் 124 ரன்களிலும் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 220 ரன்களை குவித்தது.

221 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோ மற்றும் மனிஷ் பாண்டே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மனிஷ் பாண்டே 31 ரன்களும்,பேர்ஸ்டோ 30 ரன்களும் சேர்த்து ஒரு சுமாரான தொடக்கம் தந்தனர். இதன்பின் வந்த கேப்டன் வில்லியம்சன் 20 ரன்களில் ஆட்டமிழக்க , வழக்கம்போல் ஹைதராபாத் அணியின் நடுவரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. தோல்வியடைந்த ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ஐதராபாத்தி அணிஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளதால் , வழக்கமான கேப்டன் வார்னர் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.