ஒரு எம்.எல்.ஏ கூட செல்லவில்லை… பா.ஜ.க முயற்சிக்கு மிகப்பெரிய தோல்வி! – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி

ஒரு எம்.எல்.ஏ கூட செல்லவில்லை… பா.ஜ.க முயற்சிக்கு மிகப்பெரிய தோல்வி! – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி

ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. ஒரு எம்.எல்.ஏ கூட அவர்களுக்கு ஆதரவாக செல்லவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.எல்.ஏ கூட செல்லவில்லை… பா.ஜ.க முயற்சிக்கு மிகப்பெரிய தோல்வி! – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் பதவிச் சண்டை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அழைத்துக் கொண்டு சச்சின் பைலட் குருகிராம் சென்றார். அங்கு ஹரியான போலீஸ் பாதுகாப்புடன் இருந்தார். இதனால், ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ஒரு எம்.எல்.ஏ கூட செல்லவில்லை… பா.ஜ.க முயற்சிக்கு மிகப்பெரிய தோல்வி! – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி
அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு எம்.எல்.ஏ-க்கள் சச்சின் பைலட் அணிக்கு கிடைக்கவில்லை. இதனால், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்.எல்.ஏ-க்கள் பற்றிய பிரச்னை கிளம்பியது. அதிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலை ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் அரசு தப்பும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பிரச்னையை ஆராய மூன்று நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அரசும் முழுமையாக தப்பியது.
இது குறித்து அசோக் கெலாட்டிடம் இன்று நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், “கட்சிக்குள் அமைதி மற்றும் சகோதரத்துவம் நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை மூன்று நபர் கமிட்டி அமைத்துள்ளது. அதில் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இந்த அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் எங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கூட வெளியேறவில்லை.

ஒரு எம்.எல்.ஏ கூட செல்லவில்லை… பா.ஜ.க முயற்சிக்கு மிகப்பெரிய தோல்வி! – ராஜஸ்தான் முதல்வர் பேட்டி
மதத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியலில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. இதற்கு வருமான வரித்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. இருப்பினும் எங்கள் அரசு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்யும். அடுத்த தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம்” என்றார்.