பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைப்பு விவகாரம்.. சபாநாயகர், செயலாளர், எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைப்பு விவகாரம்.. சபாநாயகர், செயலாளர், எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதிஷ் சந்திரா மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எம்.எல்,ஏ.க்கள் இணைப்பு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர், செயலாளர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைப்பு விவகாரம்.. சபாநாயகர், செயலாளர், எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

2018ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏ.க்களின் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் காங்கிரஸ் தன்னுடன் இணைத்து கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைப்பு விவகாரம்.. சபாநாயகர், செயலாளர், எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதிஷ் சந்திரா மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த இணைப்புக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதன் திலவாரும் 2 மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். திலவார் தொடர்ந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.