மோடியே பேசி விட்டார்.. கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது இல்லை.. காங்கிரஸ் அமைச்சர்

மோடியே பேசி விட்டார்.. கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது இல்லை.. காங்கிரஸ் அமைச்சர்

கோவிட்-19 தடுப்பூசிகளை கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது இல்லை, தடுப்பூசிகளை நாம் நம்ப வேண்டும் என்று தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சொந்த கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மருந்துக்கும், இந்திய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின் மருந்துகளையும் அவசரச் சூழலுக்கு பயன்படுத்தலாம் என நம் நாட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்துக்கு சோதனை ஒத்திகைகளை பல்வேறு மாநிலங்கள் நடத்தி வருகின்றன. வரும் 16ம் தேதி முதல் கோவிட்-19 தடுப்பூசி நாட்டு மக்களுக்கு போடப்பட உள்ளது.

மோடியே பேசி விட்டார்.. கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது இல்லை.. காங்கிரஸ் அமைச்சர்
கோவிட்-19 தடுப்பூசி

அதேசமயம் தடுப்பூசியின் நம்பக்தன்மை குறித்து காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். ஆனால் ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே கோவிட்-19 தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ரகு சர்மா. அவர் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக கூறியதாவது:

மோடியே பேசி விட்டார்.. கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது இல்லை.. காங்கிரஸ் அமைச்சர்
ரகு சர்மா

நாம் தடுப்பூசிகளை நம்ப வேண்டும். மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கும்போது, தேவையற்ற கேள்விகளுக்கு எழுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. பிரதமரே அனைவருடனும் சந்திப்பை நடத்தியபோது, தடுப்பூசிகளை கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கவில்லை. ராஜஸ்தானில் முதல் கட்டத்தில் 4.5 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மாநில அரசு பயிற்சி அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.