பகுஜன் எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தள்ளுபடி! – அசோக் கெலாட் நிம்மதி

 

பகுஜன் எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தள்ளுபடி! – அசோக் கெலாட் நிம்மதி

காங்கிரஸ் கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்கள் இணைந்தது தொடர்பான வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அசோக் கெலாட்டுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.

பகுஜன் எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தள்ளுபடி! – அசோக் கெலாட் நிம்மதி
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதைத் தொடர்ந்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

பகுஜன் எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தள்ளுபடி! – அசோக் கெலாட் நிம்மதி
அதே போல் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆறு எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைத் தலைவரும் பதில் அளிக்க ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று புதிதாக ஒரு மனுவை பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்தனர். ஆனால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இடைக்கால தடை விதிப்பது தொடர்பாக தனி நீதிபதி அமர்வில் முறையிடும் படி அவர்களுக்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர். எம்.எல்.ஏ-க்கள் விவகார வழக்கோடு சேர்த்து இதை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியது அசோக் கெலாட்டுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தள்ளுபடி! – அசோக் கெலாட் நிம்மதி
வருகிற 17ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூடுகிறது. இதில் அசோக் கெலாட் ஆட்சி மீது நம்பிக்கை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவருக்கு 102 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளது என்று கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ-க்களுக்கு தடை விதித்திருந்தால் ஆதரவு எண்ணிக்கை 96 ஆக குறைந்திருக்கும். தற்போது தடை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரால் வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது. அரசுக்கு எதிராக 97 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.