ராஜஸ்தான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! – பா.ஜ.க வலியுறுத்தல்

 

ராஜஸ்தான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! – பா.ஜ.க வலியுறுத்தல்

சச்சின் பைலட் நீக்கப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துவிட்டது. எனவே, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! – பா.ஜ.க வலியுறுத்தல்
இன்று ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் துணை முதல்வர் சச்சின் பைலட் பதவியை பறிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சியின் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! – பா.ஜ.க வலியுறுத்தல்சச்சின் பைலட் விவகாரத்தில் பின்னணியில் பா.ஜ.க உள்ளது. ஹரியானாவில் சச்சின் பைலட் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வாடகையை பா.ஜ.க தான் செலுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ராஜஸ்தான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்! – பா.ஜ.க வலியுறுத்தல்இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூறியுள்ளது. பாஜ.க தலைவர் குலாப் சந்திர கட்டாரியா கூறுகையில், “ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது துணை முதல்வர் நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் தன்னுடைய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முயன்றால் முதலில் தனக்குப் பெரும்பான்மை உள்ளதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்றார்.