ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் மரணம்!

 

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 2.87 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். முதல் அலையின் போது கூட உயிரிழப்புகள் அதிகமாக இல்லை. ஆனால், இரண்டாம் அலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மரணமடையச் செய்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்கு பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் கொரோனாவால் மரணம்!

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா(89) கொரோனாவுக்கு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில முன்னர் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெகன்நாத் மறைவையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கடந்த 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் முதலமைச்சராக பதவி வகித்த ஜெகன்நாத் ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.