மாஸ்க் அணியாததால் இளைஞரின் கழுத்தை முட்டியால் தாக்கிய போலீசார்!

 

மாஸ்க் அணியாததால் இளைஞரின் கழுத்தை முட்டியால் தாக்கிய போலீசார்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாஸ்க் அணியாத காரணத்திற்காக இளைஞர் ஒருவரின் கழுத்தை போலீஸ் ஒருவர் முட்டியால் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ந்த வகையில் மதுரையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் வாகனங்களில் வந்தவர்கள், நடந்து சென்றவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முகேஷ் குமார் என்ற இளைஞர் மாஸ்க் அணியாமல் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதைக் கண்ட இரு போலீஸ்காரர்கள், அவரிடம் ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டுள்ளனர். முகேஷ் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மழுப்பியுள்ளார். இதனால், போலீஸ்காரருக்கும் முகேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது, போலீஸ் ஒருவர் முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்தியுள்ளார். சில நொடிகள் வரை முகேஷ்குமாரின் கழுத்தில் போலீஸ்காரரின் முட்டி இருந்தது. நல்லவேளையாக இளைஞரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது