துரோகிகள் திரும்ப வர அனுமதிக்க கூடாது… சச்சின் பைலட்டுக்கு எதிராக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

துரோகிகள் திரும்ப வர அனுமதிக்க கூடாது… சச்சின் பைலட்டுக்கு எதிராக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையன்று தொடங்க உள்ளது. அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தன் பக்கம் இழுத்து விடலாம் என அசோக் கெலாட் முயற்சி வருகிறார். ஆனால் அதற்கு மாறாக சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

துரோகிகள் திரும்ப வர அனுமதிக்க கூடாது… சச்சின் பைலட்டுக்கு எதிராக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நேற்று முன்தினம் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நகர மேம்பாட்டு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் சாந்தி தரிவால், கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் (சச்சின் பைலட் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்) திரும்பி வர அனுமதிக்கக்கூடாது என கூறியதாகவும், அதற்கு மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததாகவும் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

துரோகிகள் திரும்ப வர அனுமதிக்க கூடாது… சச்சின் பைலட்டுக்கு எதிராக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு மீண்டும் திரும்புவதற்காக கட்சி தலைமையிடம் ஆதரவாக பேச மாட்டேன் என தெரிவித்தார். அந்த கூட்டத்துக்கு முன்னதாக முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். ஏனெனில் பொதுமக்கள் தங்கள் மீது கோபமாக இருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என தெரிவித்தார். ஆனால் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் கெலாட்டின் முடிவுக்கு மாறாக பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.