இன்று மீண்டும் நடந்து வரும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்! – சச்சின் பைலட் புறக்கணிப்பு

 

இன்று மீண்டும் நடந்து வரும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்! – சச்சின் பைலட் புறக்கணிப்பு

ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது. இன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக ஜெய்ப்பூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மீண்டும் நடந்து வரும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்! – சச்சின் பைலட் புறக்கணிப்புராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. சச்சின் பைலட்டுக்கு பா.ஜ.க பின்னணியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா போல இருக்க மாட்டேன், வந்தால் முதலமைச்சர் பதவி தந்தால் மட்டுமே வருவேன் என்று சச்சின் பைலட் கூறி வருவதால் அங்கு உடனடியாக ஆட்சி மாற்றத்தை நடத்த முடியாத நிலையில் பா.ஜ.க உள்ளது.

இன்று மீண்டும் நடந்து வரும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்! – சச்சின் பைலட் புறக்கணிப்புஅதே நேரத்தில் சச்சின் பைலட்டை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சச்சின் பைலட் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சச்சின் பைலட் வசம் 15 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ளனர். ஆனால், காங்கிரஸ் தரப்பில் 100க்கும் மேற்பட்டோர் உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மீண்டும் நடந்து வரும் ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்! – சச்சின் பைலட் புறக்கணிப்புராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும். தற்போதைய நிலையில் சச்சின் பைலட் ஆதரவு அளித்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ஃபேர்மவுண்ட் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் இன்று கூடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சச்சின் பைலட் மற்றும் அவர் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இந்த அழைப்பை புறக்கணித்த நிலையில் கூட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.