இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை நடத்துவீர்கள்? பா.ஜ.க-வுக்கு ராஜஸ்தான் முதல்வர் கேள்வி

 

இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை நடத்துவீர்கள்? பா.ஜ.க-வுக்கு ராஜஸ்தான் முதல்வர் கேள்வி

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை வாங்கும் முயற்சி நீடிப்பதால் மாநிலங்களவைத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை பா.ஜ.க நடத்தும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை நடத்துவீர்கள்? பா.ஜ.க-வுக்கு ராஜஸ்தான் முதல்வர் கேள்வி
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதே போல், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அடுத்த இலக்கு ராஜஸ்தான் என்று அக்கட்சியினர் வெளிப்படையாக கூறி வருகின்றனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதை துளி கூட அவமானமின்றி மிகப் பெருமையாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் பேரம் தொடங்கியுள்ளது.

இன்னும் எத்தனை காலத்துக்கு குதிரை பேர அரசியலை நடத்துவீர்கள்? பா.ஜ.க-வுக்கு ராஜஸ்தான் முதல்வர் கேள்வி

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கு ரூ.25 கோடி வழங்க பா.ஜ.க முன்வந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கட்சி மாற சம்மதம் தெரிவித்தால் முதல் கட்டமாக ரூ.10 கோடியும் குதிரை பேரம் முடிந்து ஆட்சி அமைத்த பிறகு மீதி 15 கோடி ரூபாயும் வழங்கத் தயாராக உள்ளதாக எம்.எல்.ஏ-க்களுக்கு வலை வீசி வருவதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் கூறுகையில், “எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க மிகப்பெரிய அளவில் பண பரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க தீவிரமாக உள்ளது. இதற்காக தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு மோடி அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் குதிரை பேர அரசியலை நடத்துவீர்கள்? மக்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு இருக்கின்றனர்” என்றார்.