சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை உள்ளது.. ரெய்டுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.. அசோக் கெலாட் அதிரடி

சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை உள்ளது.. ரெய்டுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.. அசோக் கெலாட் அதிரடி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை உள்ளது. மத்திய அமைப்புகளின் ரெய்டுகளுக்கு நாம் பயப்படமாட்டேன். பா.ஜ.க. தலைவர் மாநில அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ உண்மையானவை. இப்போது வரை அவர்களின் (பா.ஜ.க. தலைவர்கள்) முதல் ரியாக்ஷன் அது என் குரல் இல்லை. அவர்கள் மக்களையும் மிரட்டினார்கள். ஆனால் ஒன்றும் வேலை செய்யவில்லை. சத்யமேவ ஜெயதே.

சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை உள்ளது.. ரெய்டுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.. அசோக் கெலாட் அதிரடி

ராஜஸ்தான் அரசை அவர்கள் நம்பவில்லை என்றால், குரல் சோதனைக்காக அமெரிக்காவில் உள்ள எப்.எஸ்.எல். ஏஜென்சிக்கு அவர்கள் அதனை (டேப்பை) அனுப்பலாம். அவர்கள் குரல் சோதனைக்கு முன்வர வேண்டும். மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உரையாற்றி உள்ளனர் அதனால் அவர்களுக்கு இது தங்களது குரல் என்று தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எனக்கு பெரும்பான்மை உள்ளது.. ரெய்டுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.. அசோக் கெலாட் அதிரடி

ராஜஸ்தான் மாநிலத்துக்காக காங்கிரசின் சிறப்பு பார்வையாளர் அஜய் மாக்கன் பேட்டி ஒன்றில், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சியை காட்டிலும் கூடுதலாக 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.க. கூட பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரவில்லை என தெரிவித்தார்.