வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

 

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

கொரோனா வைரஸ் நிலவரம், இந்தியா-சீனா மோதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் வர வேண்டும் கோரிக்கை வைத்ததாக தகவல்.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

காங்கிரசின் இளைஞர் பிரிவு தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்ததாகவும், அகில இந்திய காங்கிரஸ் குழுவை கூட்டி ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் செய்தி வெளியானது. ஆனால் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை அந்த கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் நிலவரம், இந்தியா-சீனா மோதல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் (ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவர்) குறித்து விவாதிக்கப்படவில்லை என தெரிவித்தார். ராகுல் காந்தி 2017ல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் அதற்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.