ராஜஸ்தான் மக்களுக்கு இந்த வருஷம் சத்தமில்லாத தீபாவளி.. பட்டாசுகள் விற்பனைக்கு தடை போட்ட கெலாட் அரசு

ராஜஸ்தான் மக்களுக்கு இந்த வருஷம் சத்தமில்லாத தீபாவளி.. பட்டாசுகள் விற்பனைக்கு தடை போட்ட கெலாட் அரசு

ராஜஸ்தானில் கோவிட்-19 நோயாளிகளை பாதுகாப்பதற்காக, பட்டாசுகள் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதையும் முடக்கி போட்ட கொரோனா வைரஸ் நம் நாட்டில் கடந்த ஜனவரி இறுதியில் மெல்ல பரவ தொடங்கியது. மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்தது. இதனையடுத்து மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் பல கோடி பேர் வேலை இழந்து தவித்தனர். மக்களின் பொருளாதார சூழல் மோசம் அடைந்தது. தற்போது லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் வேலைக்கு செல்ல தொடங்கினர், பொருளாதாரம் நடவடிக்கைகள் மெதுவாக வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

ராஜஸ்தான் மக்களுக்கு இந்த வருஷம் சத்தமில்லாத தீபாவளி.. பட்டாசுகள் விற்பனைக்கு தடை போட்ட கெலாட் அரசு
முதல்வர் அசோக் கெலாட்

தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டது. இன்னும் 12 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த தீபாவளி பண்டிகை முந்தைய ஆண்டுகள் போல் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்வது போல், ராஜஸ்தான் அரசு அம்மாநிலத்தில் பட்டாசுகள் விற்பனைக்கு தடை போட்டுள்ளது.

ராஜஸ்தான் மக்களுக்கு இந்த வருஷம் சத்தமில்லாத தீபாவளி.. பட்டாசுகள் விற்பனைக்கு தடை போட்ட கெலாட் அரசு
பட்டாசு

ராஜஸ்தான் முதல்வா அசோக் கெலாட் இது தொடர்பாக டிவிட்டரில், பட்டாசு வெடிப்பதால் வெளியாகும் நச்சு புகை காரணமாக கோவிட்-19 நோயாளிகள் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்தின் பாதுகாக்கும் பொருட்டு, மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்யவும், தகுதி சான்றிதழ் இல்லாத வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.