ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா கொரோனாவுக்கு பலி.. முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்

 

ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா கொரோனாவுக்கு பலி.. முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்

ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா கொரோனாவால் காலமானார்.

ராஜஸ்தானில் தாரியாவாத் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா. இவருக்கு அண்மையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கவுதம் லால் மீனா கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தன. இதனையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கவுதம் லால் மீனா காலமானார்.

ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா கொரோனாவுக்கு பலி.. முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்
பா.ஜ.க.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா தொற்று காரணமாக தாரியாவை சேர்ந்த எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா அகால மரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. துக்கத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும், மீனாவின் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் துன்பத்தை தாங்குவதற்கும் பிரிந்து சென்ற ஆத்மாவுக்கு அமைதியை வழங்குவதற்கும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கவுதம் லால் மீனா கொரோனாவுக்கு பலி.. முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்
முதல்வர் அசோக் கெலாட்

மத்திய சுகாதார அமைச்சத்தின் புள்ளிவிவரத்தின்படி, ராஜஸ்தானில் மொத்தம் 1.59 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 7,080 பேர் பலியாகி உள்ளனர்.