ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை: காரணம் இது தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை: காரணம் இது தான்!

கொரோனா நோயாளிகளை பாதுகாக்கும் பொருட்டு, பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்து ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் புத்தாடை வாங்குவதிலும், பட்டாசுகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை: காரணம் இது தான்!

இது தொடர்பாக அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், பட்டாசு வெடிப்பதன் மூலமாக வெளியாகும் நச்சுப்புகையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக ராஜஸ்தான் முழுவதும் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் அறிவித்துள்ளார். மேலும், உடற்தகுதிச் சான்றிதழ் இன்றி வாகனங்களை இயக்கப்படுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை: காரணம் இது தான்!

தற்போது டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.