பாகிஸ்தானிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் ராஜஸ்தானுக்கு படையெடுப்பு… களத்தில் இறங்கும் விமான படை ஹெலிகாப்டர்கள்

பாகிஸ்தானிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் ராஜஸ்தானுக்கு படையெடுப்பு… களத்தில் இறங்கும் விமான படை ஹெலிகாப்டர்கள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து உணவு தேடி வரும் வெட்டுக்கிளிகள் முதலில் ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. பிறகு அங்கு இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. பயிர்களின் பச்சை இலைகளை சாப்பிடும் வெட்டுக்கிளிகள், ஏக்கர் கணக்கில் நிலப்பரப்பில் உள்ள பயிர்களை உண்டு தீர்த்து விடும்.

பாகிஸ்தானிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் ராஜஸ்தானுக்கு படையெடுப்பு… களத்தில் இறங்கும் விமான படை ஹெலிகாப்டர்கள்

ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜோத்பூர், ஜெய்சல்மர், கங்காநகர் உள்ள சில மாவட்டங்கள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இந்திய விமான படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் வேளாண் துறை துணை இயக்குனர் பி.ஆர். கத்வா கூறியதாவது:

பாகிஸ்தானிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் ராஜஸ்தானுக்கு படையெடுப்பு… களத்தில் இறங்கும் விமான படை ஹெலிகாப்டர்கள்

கடந்த ஒன்றரை மாதங்களாக வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடக்கிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜோத்பூர், ஜெய்சல்மர், கங்காநகர் உள்ள சில மாவட்டங்களுக்குள் முதலில் வரும் பாகிஸ்தானிலிருந்து வரும் வெட்டுக்கிளிகள் பின் மற்ற மாவட்டங்களுக்கு செல்கிறது. அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைள் நடந்து வருகின்றன. நாம் பழைய வெட்டுக்கிளிகளை கொன்று விட்டோம். ஆனால் புதிய வெட்டுக்கிளிகள் வந்து கொண்டு இருக்கின்றன அதுதான் இப்போது பிரச்சினை. அவற்றை கட்டுப்படுத்த இந்திய விமான படையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள எல்லை பகுதிகளை அவற்றின் இனப்பெருக்க மையங்களாக ஆக்கியுள்ளது அவை அங்கியிருந்து இங்கு வருகின்றன. பாகிஸ்தானால் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தா