ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! – முதல்வர் வீட்டில் நிற்கும் சொகுசு பஸ்கள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சித்து வரும் நிலையில் அசோக் கெலாட்டுக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதை விட, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிப்பவர்களிடமிருந்து எம்.எல்.ஏ-க்களை காப்பாற்றுவது மிகக் கடினமாக மாறி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் மிக ஜோராக நடந்து முடிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க-வின் சூழ்ச்சி தற்போது ராஜஸ்தானில் நிலை கொண்டுள்ளது.

முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட் தரப்பு எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க-வின் முயற்சியைத் தோல்வியடைய செய்ய காங்கிரஸ் படாதபாடு பட்டு வருகிறது.
தற்போது முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய இல்லத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் 107 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க 101 எம்.எல்.ஏ தேவை என்ற நிலையில், அசோக்கெலட்டிடம் 107 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சொகுசு விடுதிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக சொகுசு பஸ்கள் முதல்வர் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்து வருவதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எப்படியாவது பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வேண்டும். மக்கள் விருப்பம் அதுவே. இதற்கு எந்த மாதிரியான முயற்சியை மேற்கொண்டாலும் தவறில்லை என்று பா.ஜ.க தொண்டர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!