டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்

 

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டியில் ராயல்சேலஞ்சர் பெங்களூர் அணியோடு மோதுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்

விராட் கோலி தலைமயிலான பெங்களூர் அணி 8 போட்டிகளில் ஆடி, 5 போட்டிகளில் வென்று பாயிண்ட் டேபிளில் 3-ம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அதிக நெட்ரன்ரேட்டில் வென்றால் இரண்டாம் இடத்துக்கு முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, எட்டுப் போட்டிகளில் ஆடி, மூன்றில் மட்டுமே வென்றது. அதனால், பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி ராஜஸ்தானுக்கு மிகவும் அவசியமாது. அப்படி வென்றால் 4 அல்லது ஐந்தாவது இடத்துக்கு முன்னேற முடியும்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.