இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ராஜபக்‌ஷே

 

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ராஜபக்‌ஷே

இலங்கையில் ஆகஸ்ட் 5 –ம் தேதி தேர்தல் நடந்தது. ஓரிரு மாதங்கள் முன்பே நடைபெற வேண்டிய தேர்தல் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ராஜபக்‌ஷே

தேர்தல் முடிவு சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில், ராஜபக்‌ஷே தலையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜபக்‌ஷே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி கூட்டணி அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு மடங்கு வெற்றியை அடைந்துள்ளது. இதன்மூலம் 15ம் சீட்டுகள் அக்கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன.  இதமூலம் ஆட்சியைப் பிடித்தார் ராஜபக்‌ஷே.

ராஜபக்‌ஷே தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றதற்கான காரணங்களுல் ஒன்றாக, கொரோனா நோய்த் தொற்றலைச் சாமார்த்தியமாக அரசு கையாண்டதை அந்நாட்டு விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ராஜபக்‌ஷே

இன்று காலை இலங்கையின் ஜனாதிபதியும் ராஜபக்‌ஷேவின் சகோதரருமான கோத்தாபய முன்னிலையில், மஹிந்த ராஜக்‌ஷே பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா களனி ரஜமகா விகாரையில் நடந்தது.

ராஜபக்‌ஷே இதற்கு முன் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தற்போது நான்காம் முறையாகப் பதவிக்கு வந்துள்ளார்.

தனது பதவியேற்புக்குப் பின், ’எங்கள் மக்களுக்குச் சேவையாற்ற கிடைத்த இன்னொரு வாய்ப்பு இது. இலங்கையர்கள் அளித்திருக்கும் நம்பிக்கை, என்னை தேசத்திற்கு சேவை செய்ய தூண்டுகிறது’ என்பதாக ட்விட்டரில் பதவிட்டுள்ளார் ராஜபக்‌ஷே.

இலங்கை பிரதமராகப் பதவியேற்றார் ராஜபக்‌ஷே

மகிந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர் கோத்தாபய அந்நாட்டின் ஜனாதிபதியாகவும் இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்‌ஷே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்கள். இந்தத் தேர்தல் வெற்றிமூலம் ராஜபக்‌ஷேவின் குடும்பத்தின் பிடியில் இலங்கையின் அரசியல் வரப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.