அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து என்ற தீர்மானம் செல்லாது- சசிகலா வழக்கறிஞர் அதிரடி

 

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து என்ற தீர்மானம் செல்லாது- சசிகலா வழக்கறிஞர் அதிரடி

அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளில் இடமில்லை என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ச‌சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “12.9.2017 அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என ச‌சிகலா தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவில் எந்த புதிய பதவிக்கும் விதிமுறைகளின் இடமில்லை என்ற வழக்கு இடைக்கால உத்தரவும் நிலுவையில் உள்ளது. இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் இந்த வழக்கு குறித்து பேசாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து என்ற தீர்மானம் செல்லாது- சசிகலா வழக்கறிஞர் அதிரடி

ஜெயலலிதா மறைந்து, சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்த பின்னர், 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கம், டிடிவி.தினகரன் நீக்கம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.