சசிகலா விடுதலை குறித்து 2 நாட்களில் தெரியவரும்- வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

 

சசிகலா விடுதலை குறித்து 2 நாட்களில் தெரியவரும்- வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.

சசிகலா விடுதலை குறித்து 2 நாட்களில் தெரியவரும்- வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “சசிகலா கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு இன்றுவரை நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றத்திலிருந்து ஏதாவது நல்ல தகவல் வரும் எதிர்பார்க்கிறோம். சசிகலாவுக்கு நீதிமன்றத்தில் இருந்து அபராத தொகையை செலுத்துமாறு தகவல் கிடைத்தால் எனக்கு அதுபற்றி கடிதம் மூலம் தெரிவிப்பார்கள். அதன்பின் நாங்கள் உடனடியாக நீதிமன்றத்தில் பணத்தை செலுத்துவோம். எனவே நாளை அல்லது நாளை மறுநாள் அதாவது இன்னும் 2 நாட்களில் சசிகலா விடுதலை குறித்து முக்கிய தகவல் வரலாம்” எனக் கூறினார்.