“அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்படும்”

 

“அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்படும்”

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜன், மருத்துவமனைகளின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதிகளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால், மத்திய அரசிடம் கூடுதலாக ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அதன் பேரில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு டன் கணக்கில் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

“அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்படும்”

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “இரண்டு நாட்களில் தமிழ் நாடுமுழுவதும் 4993 பேருந்துகளில் 660384 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.தேவை ஏற்பட்டால் அரசுப் பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்படும். சென்னையிலிருந்து நேற்று 391 பேருந்துகளில் 18746 பயணிகள் கோயம்பேட்டிலிருந்து பயணம் செய்துள்ளனர். இன்று 940 பேருந்துகளில் 47000 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். தற்போது கோயம்பேட்டில் 468 பேருந்துகள் கையிருப்பாக உள்ளது என்றும் கூறினார். வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு உள்ளூரில் பயணம் செய்ய பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” எனக் கூறினார்.